விஷம் கலந்த தக்காளியை நூடுல்சில் கலந்துசாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை, மலாடில் உள்ள பாஸ்கல் வாடியில் வசித்து வருகிறார் ரேகா நிஷாத். தனது கணவருடன் வசித்து வரும் ரேகா கூலி வேலை செய்து வந்தார். அவர்கள் வீட்டில் அதிகமாக எலி தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் எலிகளுக்கு தக்காளியில் விஷம் வைத்திருக்கிறார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உடன் நூடுல்ஸ் தயார் செய்திருக்கிறார்.அதில் எலிக்கு வைத்திருந்த விஷம் கலந்த தக்காளியை தெரியாமல் பயன்படுத்தி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அந்த நூடுல்ஸ்சினை சாப்பிட்டு, சிறிது நேரத்துக்குள் அந்த பெண்ணின் உடல்நிலை சரியாகாமல் போக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த செய்தி வெளியானது. புதன்கிழமை அன்று உயிரிழந்தார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 100,000 பேருக்கு 32.6 என்ற தேசிய சராசரியை விட அதிகமான விபத்து இறப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,74,397 தற்செயலான இறப்புகள் ஏற்பட்டுள்ளன, இதில் 35% க்கும் அதிகமான இறப்புகள் வாகன விபத்துக்களால் ஏற்படுகின்றன.இது போன்ற நிகழ்வுகள், ஒரு நபர் அறியாமல் அலட்சியம் காரணமாக சுயமாக விளைவித்து தானே மரணம் அடையும் நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !