கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவி பிரிந்ததை அடுத்து மச்சினியை வசியம் செய்ய முயன்ற அக்கா புருஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவி பிரிந்ததை அடுத்து மச்சினியை வசியம் செய்ய முயன்ற அக்கா புருஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(23). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி(21) என்பவரை காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேன்மொழி, ராஜேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்து புரட்டி எடுத்த இன்ஸ்பெக்டர்.. பணத்தையும் ஆட்டையை போட்டதால் ஆப்பு
இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு ராஜேஷ், தனது மனைவி தேன்மொழியின் தங்கையான 19 வயது இளம்பெண்ணை திடீரென வழிமறித்து, அவர் மீது எண்ணெய் பசபசப்புள்ள ஒரு திரவத்தை ஊற்றிவிட்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆசிட் வீசியதாக நினைத்து அலறி கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.
இதையும் படிங்க;- ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது
அப்போது, உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதாக தெரிவித்த இளம்பெண்ணை மீட்டு உடனடியாக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். அப்போது ராஜேஷ், கடந்த 3 மாதமாக காதல் மச்சினிச்சியை வசியப்படுத்தும் முயற்சியில், அவர் மீது மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார், ராஜேஷை திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.