புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்து புரட்டி எடுத்த இன்ஸ்பெக்டர்.. பணத்தையும் ஆட்டையை போட்டதால் ஆப்பு

By vinoth kumarFirst Published Jul 30, 2022, 10:47 AM IST
Highlights

புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் பண மோடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் பண மோடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மாரிமுத்து. இவரது மனைவி கோமதி (42). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் தங்களுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு, அதற்கான பணியை மொத்தமாக அலங்காநல்லூரை சேர்ந்த முருகன் என்ற சிவில் இன்ஜினியரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்ஜினியர் முருகன் அதிகபட்சமான தொகையை கோமதியிடமிருந்து வாங்கிக் கொண்டு, கட்டுமான பணிகளை குறித்த நேரத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

இது தொடர்பாக கோமதி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போலீசில், கடந்த 23.10.2019ல் புகார் மனு கொடுத்தார். அவர் முருகன் மற்றும் கோமதியை வரவழைத்து  புகார் மனு குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்ததாண்டவத்திற்கும் கோமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோமதியுடையாக பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த தாண்டவம், அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். 

 பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதாகவும், வீட்டை கட்டித் தருவதாக ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, அங்கிருந்தவர்களால், தான் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனந்த தாண்டவத்தின் மீது கடந்த ஏப்ரல் மாதல் டி.ஜி.பி அலுவலகத்துக்குப் புகார் தெரிவித்தார். அத்துடன் முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் ஆகியோருக்கு தபால் மூலம் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ள ஆனந்ததாண்டவத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;-  ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது

click me!