ஆம்புலன்ஸ் இல்ல.. ஸ்ரீமதியை 2 பசங்க காரில் தூக்கி வந்து போட்டுட்டு போய்டாங்க.. பகிர் கிளப்பும் ஆடியோ.

By Ezhilarasan Babu  |  First Published Jul 30, 2022, 9:02 AM IST

மாணவி ஸ்ரீமதியின் உடல் விடியற்காலை 3:30 மணிக்கே மருத்துவமனைக்கு வந்து விட்டதாக அங்கு பணியாற்றும் ஊழியர் என்ற பெயரில்  பெண் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மாணவி ஸ்ரீமதியின் உடல் விடியற்காலை 3:30 மணிக்கே மருத்துவமனைக்கு வந்து விட்டதாக அங்கு பணியாற்றும் ஊழியர் என்ற பெயரில் பெண் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்கள் 3:30 மணிக்கே காரில் மாணவியின் உடலை கொண்டு வந்து மருத்துவமனையில் போட்டுவிட்டு சென்றுவிட்டதாக அந்த ஆடியோவில் பேசும் பெண் கூறியுள்ளார்.  இதை பிரபல ஊடகமான நக்கீரன் வெளியிட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர்  மாவட்டம் நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கூட மேல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது, 

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை  தொடங்கினர் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவியின் பெற்றோர்கள் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அது தற்கொலை இல்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் தங்கள் மகள் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர், இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரோலியாக மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், உயிரியல் ஆசிரியர் ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது, மனைவியின் உடற்கூறு ஆய்வில் மாணவியின் உடலில் சில சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளுக்காக பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புலனாய்வு பத்திரிக்கைகளில் ஒன்றான நக்கீரன் ஊடகம் இரண்டு ஆடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பெண்கள் பேசியுள்ளனர், முதல் ஆடியோ பள்ளி செயலாளர்  சாந்திக்கு உதவியாளராக இருந்து வரும் மாலினி என்பவர் பேசும் ஆடியோ, இரண்டாவதாக பேசும் ஆடியோ ஸ்ரீமதி பிணமாக கொண்டுவரும்போது பார்த்த மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவர், அந்த பெண் பேசும் அந்த ஆடியோவில் ஸ்ரீமதி உடல் எத்தனை மணிக்கு  மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது, எப்படி கொண்டுவரப்பட்டது, வந்தபோது மாணவியின் உடல் எந்த நிலையில் இருந்த து என்பவற்றை கூறியுள்ளார். அவர் பேசியுள்ள ஆடியோ விவரம் பின்வருமாறு:- 

மாணவி உடலை 3.30 மணிக்கே இங்கு கொண்டு வந்து போட்டுடாங்க, பிறகுதான் கீழ விழுந்துடுச்சுன்னு பெற்றோர்கள்கிட்ட சொல்லி இருக்காங்க, அதன் பிறகுதான் அவர்கள் ஆறரை மணிக்கு கிளம்பி வந்திருக்காங்க,

ஸ்ரீமதி உடல் ஆம்புலன்சில் வரல, அந்த பள்ளிக்கூடத்து காரில்தான் கொண்டுவந்தாங்க, கூட ரெண்டு பசங்க வந்தாங்க, வந்து ஹாஸ்பிட்டலில் போட்டுட்டாங்க, போட்டுட்டு அவங்க உடனே கிளம்பிட்டாங்க, அதற்கு பிறகுதான் பெற்றோர்கள் வந்தாங்க, அப்போது அங்கிருந்த டாக்டர் எல்லாம் முடிந்துவிட்டது, முடிஞ்சி 5 மணி நேரம் கழித்து வந்திருக்கிறீர்கள்னு சொன்னாங்க, அந்த பொண்ணாக சாக கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

ஸ்ரீமதி உடல் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது என்றும், தங்களுக்கு காலையில் வாட்ச்மேன் பார்த்த பிறகு ஐந்து மணிக்கு மேலதான் தெரியும் என பள்ளி நிர்வாகம் கூறிவரும் நிலையில், ஸ்ரீமதி என் உடல் 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது என அந்தப்பெண் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் கிளப்புவதாக உள்ளது. ஸ்ரீமதியின் உடலை காரில் கொண்டு வந்த அந்த இரண்டு இளைஞர்கள் யார்.? என்பதும் கேள்வியும் எழுகிறது. 
 

click me!