நெல்லையில் புதுமாப்பிள்ளை படுகொலை!எங்களுக்கு கொல்லி வைக்க கூட ஒரு புள்ள இல்லாம கொன்னுட்டாங்களே!கதறும் பெற்றோர்

Published : Jul 30, 2022, 07:32 AM ISTUpdated : Jul 30, 2022, 07:35 AM IST
நெல்லையில் புதுமாப்பிள்ளை படுகொலை!எங்களுக்கு கொல்லி வைக்க கூட ஒரு புள்ள இல்லாம கொன்னுட்டாங்களே!கதறும் பெற்றோர்

சுருக்கம்

சாமிதுரையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது, மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை நள்ளிரவில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி(60). அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்து. இவர்களுக்கு சுப்பையா, சாமிதுரை(23) மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு மணல் அள்ளுவதில் பெரியப்பா மகன்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் சுப்பையா வெட்டி கொலை செய்யப்பட்டார். இளைய மகன் சாமித்துரை கூலி வேலைக்கு சென்று வருவதோடு அவ்வப்போது  தந்தையின் பெட்டிக் கடையையும் கவனித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சாதிதுரைக்கு சமீபத்தில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் பேசி முடித்துள்ளனர்.

இதையும் படிங்க;- ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது

திருமண விஷயமாக சிலரை பார்க்க தந்தை சுந்தரபாண்டியன் நேற்று நெல்லைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து நாகர்கோவில் பேருந்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் நாங்குநேரி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக சாமிநாதன் பைக்கில் சென்றார். அங்கு நின்றிருந்த தந்தையை அழைத்து வந்து வீட்டில் அழைத்து வந்துவிட்டுள்ளார். பின்னர், பைக்கை வீட்டின் முன்பு  நிறுத்திவிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது இவரது வீட்டு வாசலுக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிதுரையை சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதற்கிடையே சாமிதுரையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது, மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் சாமிதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;-  செஃபி எடுத்து திருமண நாளை கொண்டாடிய மனைவி திடீர் மாயம்.. காதலனுடன் சென்றது அம்பலம்.. கணவர் அதிர்ச்சி.!

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிதுரையை கொன்ற கும்பல் யார்? என விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு கோதைசேரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சாமிதுரைக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த வழக்கு காரணமாக பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன் மற்றும் திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த கொலை 2 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க;-  31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி