மகனே தன் தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய ஜூகு கொலை வழக்கில் காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகனே தன் தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய ஜூகு கொலை வழக்கில் காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அருகே உள்ள ஜூகு பகுதியைச் சேர்ந்தவர் வீணா கபூர் (74). இவரது மகன் சச்சின் (43). தாய்-மகன் இருவருக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அவர்கள் கரிப் தாஸ் சொசைட்டி குடியிருப்பில் தனித்தனி அறைகளில் வசித்து வந்தனர்.
டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் தனது தாய் இருக்கும் வீட்டுக்கு காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஆத்தரம் அடைந்திருந்த சச்சின் கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்று தாயுடன் சண்டையிட்டுள்ளார்.
Viral Video: கத்தியை சாணை பிடிக்கும் ராமாயணக் குரங்கு! ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வைரல் வீடியோ!
அப்போது வாக்குவாதம் முற்றி பெற்ற தாய் என்றும் பார்க்காமல் பேஸ்பால் பேட்டை வைத்து ஓங்கி பலமுறை அடித்துள்ளார். இதில் வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். சச்சின் தாயைத் தாக்கும் காட்சி அவரது படுக்கையறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் தாயின் உடலை மும்பைக்கு அருகே ரகசியமாக புதைக்க ஆன்லைனில் இடம் தேடி இருக்கிறார். பின்னர் தாயின் உடலை மூட்டையாகக் கட்டி மாலையில் நேரல்-மாத்தேரன் சாலையில் உள்ள 30 அடி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு வந்திருக்கிறார்.
சச்சினின் வீட்டில் வேலை பார்க்கும் லாலுகுமார் மண்டல் என்பவர் சச்சினுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். வீணாவின் படுக்கையறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றவும், கொலைக்குப் பிறகு உள்ள அறையைச் சுத்தம் செய்து, உடலையும் பள்ளத்தாக்கில் வீசுவதற்கும் உதவி இருக்கிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது
அமெரிக்காவில் பணிபுரியும் வீணாவின் மூத்த மகன் நெவின் மூலம் இந்தக் கொலை வெளியே தெரியவந்திருக்கிறது. வழக்கமாக தினமும் தன் தாயுடன் போனில் பேசும் நெவின் டிசம்பர் 6ஆம் தேதி மாலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றிருக்கிறார். பின்னர் தயார் வசிக்கும் குடியிருப்பின் செக்யூரிட்டியிடம் தெரிவித்து தன் தாயைத் தொடர்புகொள்ள உதவி கோரி இருக்கிறார். செக்யூரிட்டியும் போனில் வீணாவை தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீணாவின் படுக்கை அறையில் அவரது இரண்டு மொபைல் போன்களைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் 41 பேர் இந்தக் கொலை தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அவற்றுடன் தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், ரத்தக்கறை படிந்த பேஸ்பால் பேட், வீணாவின் மூத்த மகன் நெவின் வாக்குமூலம், சுங்கச்சாவடி ஊழியர்களின் வாக்குமூலம் ஆகியவை முக்கிய சாட்சியங்களாக உள்ளன.
சச்சின் தாயின் உடலை மூட்டை கட்டி காரில் எடுத்துச் செல்லும் காட்சியும் திரும்பி வரும்போது மூட்டை இல்லாமல் காலியாக வரும் காட்சியும் டோல்கேட் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன.
அம்மா தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தார் என்றும் இரவு நேரத்தில் நான் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்க விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, காலிங் பெல்லையும் அணைத்து வைத்துவிடுவார் என்றும் சச்சின் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சச்சின் மற்றும் மண்டல் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்