அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது

By Velmurugan s  |  First Published Feb 25, 2023, 9:00 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மா பாளையம்  கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6 வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக செல்வகுமார் என்பவர்  பணியாற்றி வருகிறார்.

இதே பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தாதகவும் ஆசிரியர் செல்வகுமார் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஆளுநருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்! இப்படியே பேசிட்டு இருந்தீங்க தமிழ்நாட்டுல எங்கும் நடமாட முடியாது! முத்தரசன்

இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரியின் அடிப்படையில் ஆசிரியர் செல்வக்குமாரை விசாரித்த போது அவர்  பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யபட்டதால்  அவர்மீது பெரம்பலூர் மகளிர் போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்யபட்டு  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!