திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்ப பிரச்சனையில் மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை, பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்திரவு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் வட்டிக்கு கடன் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல் மனைவியுடன் எந்தவித தொடர்பு மற்றும் பேச்சு வார்த்தை இல்லை என கூறப்படுகிறது.
இதனால் இரண்டாவது மனைவியான பாக்கியலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பாக்கியலட்சுமிக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பழனிச்சாமி பாக்கியலட்சுமியை கத்தியால் குத்தியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
undefined
திண்டுக்கல் கருப்பணசாமி கோவில் ஜல்லிக்கட்டு போட்டி 450 காளைகள் பங்கேற்பு
இதனுடைய பாக்கியலட்சுமி மகனான கணேசன் (30) ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலை இவருக்கும், பழனிசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றவே பழனிசாமி தன்னுடைய மகன் என்றும் பாராமல் கணேசனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பட்டிவீரம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.