கிருஷ்ணகிரி அருகே தனது தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை சகமாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன திருப்பதி. கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகிறார். இதே கல்லூரியில் இவரது தங்கை படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது தங்கைக்கு அதே கல்லூரியில், இளங்கலை ஆங்கிலம் 3ம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் என்ற மாணவன் காதல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சின்ன திருப்பதி ஏற்கனவே லிங்கேஸ்வரனை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று லிங்கேஸ்வரன் மீண்டும் மாணவிக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் சகோதரர் சின்ன திருப்பதி லிங்கேஸ்வரனை மீண்டும் கண்டித்துள்ளார்.
சினிமா பாணியில் காரை குத்தி கிழித்த கொம்பன் யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகளப்பாக மாறியது. அப்போது லிங்கேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ன திருப்பதி கழுத்தை அறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த சின்ன திருப்பதி கீழே விழுந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.