சூரத் அருகே ஆபாச வீடியோ பார்ப்பதைத் தடுத்த மனைவியை தீ வைத்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஆபாச விடியோ பார்த்தது தொடர்பான வாக்குவாதத்தில் கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பெண் படுகாயம் அடைந்துள்ளார்.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞர் கிஷோர் படேல். இவரது மனைவி காஜல். இருவரும் மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் ஒன்றாகப் பணியாற்றி வந்துள்ளனர். காஜல் ஏற்கெனவே திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர்.
இவர்கள் இரவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்தபின் சூரத் புறநகர் பகுதியில் உள்ள கட்டர்கிராமில் வசித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது கிஷோர் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அதனை மனைவி பார்க்க வேண்டாம் என்று கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது.
Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு
இதனால் மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கிஷோர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்.
புதன்கிழமை அச்சம்பவம் காவல்துறைக்குத் தெரியவந்ததும் அவர்கள் விரைந்து சென்று கிஷோர் படேலை கைது செய்தனர். 40 சதவீதம் அளவுக்கு தீக்காயங்கள் அடைந்த நிலையில் காஜல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். முன்பே அவருக்கு நுரையிரல் பாதிப்பு இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பெண் அளித்த கடைசி வாக்குமூலத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கணவர் பான் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அவரை வீடியோவை நிறுத்தச் சொன்னதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது என்றும் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
சென்ற சில மாதங்களாகவே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துகொண்டிருந்ததும் காவல்துறையின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக படேலை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்