நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் மது குடித்துள்ளார்.
நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து நண்பர்களே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை வசித்து வரும் எர்ணாகுளத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி 3 பேரும் தனியாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடந்த 18ம் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் ஒருவர் அழைத்துள்ளார். நண்பர்கள் தான் அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் மாணவியும் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் மது குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் போதையில் அந்த மாணவி மயங்கி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய இருவரும் தோழி என்று கூட பாராமல் இரவு முழுவதும் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதையில் மட்டையாகி கிடந்த நண்பர்களிடம் தப்பித்து வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி ஆசிரியைகளிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி கோழிக்கோடு கசபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் என்று நம்பி வீட்டுக்கு சென்ற மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.