தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார்(36). இவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் ஆட்சியர் அலுவலகம் அருகில் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார்(36). இவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் ஆட்சியர் அலுவலகம் அருகில் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று மதியம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு காரில் வந்திருந்தார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்;- கடந்த 2019-ம் ஆண்டு சிவக்குமார் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ராஜேஷ் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவர முயற்சி செய்தும் அதை முத்துக்குமார் தடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேசின் கூட்டாளிகள் முத்துக்குமாரை கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலகம் அருகில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.