திருவண்ணாமலை பேகோபுரம் 5வது தெருவில் வசித்து வந்தவர் விஜயா (65). தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் கணவனை இழந்த காஞ்சனா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.
சொந்தம் பந்தம் யாரும் இல்லாமல் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு சொத்தை அபகரிக்க முயன்ற வாடகைக்கு குடியிருந்த காஞ்சனா அவரது கள்ளக்காதலன் ஞானவேல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை பேகோபுரம் 5வது தெருவில் வசித்து வந்தவர் விஜயா (65). தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் கணவனை இழந்த காஞ்சனா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேலு(38) என்பவருடன் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காஞ்சனா கடந்த சில மாதங்களாக சரியான முறையில் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் விஜயா வாடகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சொந்தம் பந்தம் யாரும் இல்லாமல் தனியாக வசித்து வரும் மூதாட்டியை கொலை செய்துவிட்டு சொத்தை அபகரிக்க காஞ்சனா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டார். இந்நிலையில், சாஞ்சனா, ஞானவேலு இருவரும் சேர்ந்து விஜயாவை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடலை ஞானவேல் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தச்சம்பட்டு பகுதியில் உள்ள காப்புகாட்டு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து, பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தச்சம்பட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் சொத்துக்காக காஞ்சனாவும், ஞானவேலுவும் கூட்டு சேர்ந்து மூதாட்டி விஜயாவை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.