சங்கீதா கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் சங்கீதாவுக்கு பல ஆண் நண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செஞ்சி அருகே மாமியார் என்று கூட பாராமல் கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். சின்னபாப்பா தம்பதி. இவரது மகன் பாஸ்கர் (33). சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் காலை இழந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவி சங்கீதா கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் சங்கீதாவுக்கு பல ஆண் நண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் ஷாக்கிங் நியூஸ்.. டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. எப்படி தெரியுமா?
இந்த விவகாரத்தை அறிந்த மாமியார் சின்னபாப்பாவுக்கு தெரிய வந்ததால் சங்கீதாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினமும் மாமியார், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த மருமகள் சங்கீதா அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மாமியார் சின்ன பாப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க;- தமிழகத்தை அதிரவைத்த பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது.. நடந்தது என்ன?
இதில் படுகாயமடைந்த சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததை அடுத்து அக்கம் பக்கதத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்னபாப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக சங்கீதாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.