ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது!

By Manikanda Prabu  |  First Published Sep 6, 2023, 6:09 PM IST

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்


கேரள மாநிலம் திருச்சூரை தளமாகக் கொண்ட தொகுதியின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவராக கருதப்படும் சையது நபில் அகமது என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.

Tap to resize

Latest Videos

போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை கைது செய்ததாகவும், அவரைப் பிடிக்க கடந்த சில வாரங்களாகவே ரகசியமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்விகியில் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: தெனாவட்டாக பேசிய ஊழியர்!

இந்த வழக்கில், சையது நபில் அகமதுவையும் சேர்த்து இதுவரை மூன்று பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த இவரது கூட்டாளியான ஆசிஃப் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர்.

கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!