தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காங்கிரஸ் பிரமுகரை சொத்து தகராறில் அவரது தாயாரும், சகோதரரும் உருட்டு கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவைச் சேர்ந்தவர் வேம்புகுரு. இவரது மகன் மாரி செல்வம்(வயது 30). இவர் காங்கிரஸ் கட்சியில் கருங்குளம் வட்டார செயலாளராக உள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி மாரிசெல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லெட்சுமியும் இருந்துள்ளார். இதில் லெட்சுமியும் மணிகண்டனும் உருட்டுகட்டையால் மாரிசெல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மாரிசெல்வத்தினை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாயார் லெட்சுமி, தம்பி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
பட்டியலின பெண் சமைப்பதை சாப்பிடுவதா? சத்துணவு திட்ட பணியாளருக்கு எதிராக போர்க்கொடி; ஆட்சியர் அதிரடி
இதற்கிடையில் மாரிசெல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை மாரிசெல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அருகே 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஓட்டுநரை கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை