கொலையில் ஈடுபட்டவர்கள் கொலைவெறியில் வெட்டியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன.
திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் உள்ளிட்ட 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட செந்தில் குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டி சாய்ந்தது.
undefined
இதையும் படிங்க;- குலைநடுங்க வைத்த பல்லடம் கொலை! மறைச்சு வச்சுக்கிற கத்திய காட்டுகிறேன் சொல்லிட்டு! எஸ்கேப்பாக நினைத்த குற்றவாளி
இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. கொலையில் ஈடுபட்டவர்கள் கொலைவெறியில் வெட்டியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணம் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதால் தான் உண்மை காரணம் தெரியவரும் என கூறப்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- பல்லடத்தில் 4 பேர் கொடூர கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்.! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் பரபரப்பு தகவல்
இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் சோசனை முத்தையா ஆகியோர் திருப்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். விசாரணையில் எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது தெரியவரும்.