
அதிக லாபம் தருவதாக கூறி ஆசைவார்த்தை கூறி 7 கோடி ரூபாய் ஏமாற்றி நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை முகப்பேரில் எம்எல்எம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம் எனக்கூறி உறவினர்கள் நண்பர்கள் என பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பாலகுமரன் என்ற நபர் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல் 6 மாதங்கள் முறையாக வட்டி கிடைத்ததால் முதலீட்டார்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை.. உடல் சிதறி உயிரிழந்த 3 பேர்.. நடந்தது என்ன?
மொத்த 7 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்தது. இதனையடுத்து பாலகுமரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு சேர்த்த தனது பணத்தை கொடுத்துவிடுமாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ பதிவு செய்து பாலகுமரனுக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருவது தெரிந்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோவுடன் சேர்த்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 10 நாளில் பிரிந்த மனைவி! புதுமாப்பிள்ளை கொடூர கொலை! நடந்தது என்ன? வெளியாக பகீர் தகவல்.!