கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யபட்ட ராமர் பாண்டியன் உடலை 7 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர்பாண்டி, கடந்த 2012ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி மதுரை அருகே புளியங்குளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ராமர்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யபட்டார்.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு: நிறைவு செய்யும் திமுக!
இதனைத் தொடர்ந்து ராமர் பாண்டியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ராமர் பாண்டியனின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து விட்டனர். அதனால் கடந்த ஏழு நாட்களாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டிருந்த ராமர் பாண்டியன் உடலை இன்று பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமர் பாண்டியனின் உடல் மதுரை கொண்டு செல்ல பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரௌடியின் உடல் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.