திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடந்து வருவதாக பழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பழனி பகுதியில் கடந்த 4 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடந்து வருவதாக பழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
undefined
விசாரணையில் அவர்கள் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஸ்குமார் (42), தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியை சேர்ந்த பாண்டியன் மகன் பூபதி (32), பழனி தேவாங்கர் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கோபிநாத் (30), பழனியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஹரிவிக்னேஷ்குமார் (22) என்பதும், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சுமார் 1 கிலோ 900 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பழனி டவுன் மற்றும் அடிவார பகுதியில் கடந்த 4 நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் பழனி போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.