சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை கல்யாணம் பண்ணுவியா.. சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை?

Published : Feb 25, 2024, 08:45 AM ISTUpdated : Feb 25, 2024, 01:43 PM IST
சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை கல்யாணம் பண்ணுவியா.. சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை?

சுருக்கம்

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சென்னையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதங்களுக்கு முன்னதாக ஷர்மியை பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய இளம்பெண்.. நான் கூப்பிடும் போது வரலனா இதுதான் நடக்கும்.. இளைஞர் மிரட்டல்.!

இதனால் பிரவீன் மீது ஷர்மி வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், பிரவீன் நேற்று இரவு பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஷர்மியின் அண்ணன் உட்பட 3 பேர் பிரவீனிடம் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். 

இதையும் படிங்க:  ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. விஷயம் தெரிந்த கணவர்.. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்!

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை தங்கை ஷர்மி திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர் ஆணவக் கொலை  செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!