பள்ளி சுற்றுலாவின்போது, 2ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியார் பள்ளி, தங்களது பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அப்போது, சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிகிறது. இதனை கண்டித்து, அப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி சுற்றுலாவின்போது, பள்ளி நிர்வாகத்துடன் வந்த வெளியாட்களால் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், “பிப்ரவரி 20 ஆம் தேதி, 2 ஆம் வகுப்பு குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தால் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு வெளியாட்களும் அவர்களுடன் சென்றுள்ளனர். இது எந்த பெற்றோருக்கும் தெரிவிக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் அவர்கள் சுற்றுலாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஒருவர், 8 முதல் 10 குழந்தைகளுக்கு பாலியல் தொந்திரவு அளித்துள்ளார். குழந்தைகள் தங்களது கண்காணிப்பில் இருந்ததாகவும், எதுவும் நடக்கவில்லை எனவும் இந்த குற்றச்சாட்டை ஆசிரியர்கள் இதனை மறுக்கிறார்கள்; ஆனால் எட்டு குழந்தைகளும் பொய் சொல்லாது.” என்றார்.
மணிப்பூர் வன்முறை: முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற உயர் நீதிமன்றம்!
மேலும், “ஆசிரியர்கள் மறுக்கிறார்கள்; மூன்றாம் தரப்பினரை நியமிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதை பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. முழுவதுமாக மூன்றாம் நபர் மீதுதான் குற்றம் சாட்டுகிறார்கள். சுற்றுலா பயணத்தை திட்டமிட்ட ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ராஜினாமா செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், குற்றவாளிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்.” எனவும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்பந்தப்பட்ட நபரை கபூர்பாவாடி போலீஸார் கைது செய்தனர். ஆனாலும், நீதி கோரி பள்ளிக்கு வெளியே பெற்றோர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.