வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய இளம்பெண்.. நான் கூப்பிடும் போது வரலனா இதுதான் நடக்கும்.. இளைஞர் மிரட்டல்.!

By vinoth kumar  |  First Published Feb 22, 2024, 3:29 PM IST

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(23) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார். 


மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி வீடியோ காலில் பேசி நிர்வாண வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(23) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இதனை உண்மை என்று நம்பி அந்த பெண்ணும் பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கவே வீடியோ கால் மூலமாக அடிக்கடி பேசி வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கதற கதற பலாத்காரம்? வெறி தீராததால் தலையில் கல்லைப் போட்டு பெண் கொடூரக் கொலை.. பெங்களூருவில் பயங்கரம்!

சில நேரங்களில் நிர்வாணமாக பேச கட்டாயப்படுத்தியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் அருண்குமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது அருண்குமார் நான் அழைக்கும் போதெல்லாம் வரவில்லை என்றால் உன்னுடைய நிர்வாண வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அருண்குமாரிடம் விசாரணை நடத்திய பிறகு இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க:  இப்படியும் காமக்கொடூரர்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்!

click me!