கர்நாடகா மாநிலம் பெங்களூரு சாந்திநகர் பகுதியில் டபுள் ரோட்டில் ஜனதா கூட்டுறவு வங்கி கட்டிடம் உள்ளது. அதன் அருகே உள்ள பாழடைந்த கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.
தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு சாந்திநகர் பகுதியில் டபுள் ரோட்டில் ஜனதா கூட்டுறவு வங்கி கட்டிடம் உள்ளது. அதன் அருகே உள்ள பாழடைந்த கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி! பயங்கர சத்தத்துடன் மோதி நின்றதால் அலறிய பயணிகள்.!
அங்கு சென்று பார்த்த போது தலையில் கல்லைப் போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியும் காமக்கொடூரர்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்!