Karur Murder: மதுரையை சேர்ந்த பிரபல ரௌடி தலையை துண்டித்து கொடூர கொலை; கரூரில் பரபரப்பு

Published : Feb 19, 2024, 07:07 PM ISTUpdated : Feb 19, 2024, 07:10 PM IST
Karur Murder: மதுரையை சேர்ந்த பிரபல ரௌடி தலையை துண்டித்து கொடூர கொலை; கரூரில் பரபரப்பு

சுருக்கம்

மதுரையில் தேவர் ஜெயந்திக்கு சென்றவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய நபர் கரூரில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ரௌடி ராமர் பாண்டியன் (வயது 36), இவரது நெருங்கிய கூட்டாளி கார்த்திக்(39). கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது குருபூஜைக்கு சென்று வந்தவர்கள் மீது சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பாக ராமர் பாண்டியன், கார்த்திக் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமர் பாண்டியன் மற்றும் கார்த்திக் ஆஜராகி வந்தனர். இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதில் இவர்கள் இருவரும் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானதாகக் கூறப்படுகிறது.

சிறந்த விளையாட்டு வீரனுக்கு தேவையான அனைத்து திறமைகளும் கலைஞரிடம் இருந்தது - அமைச்சர் உதயநிதி

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அரவக்குறிச்சி அடுத்த தேரடிப்பாடி சாலை பிரிவு அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென இவர்களை காரில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து அவசரமாக தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் ராமர் பாண்டியன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் எம்.பி. கனிமொழியை அதிமுக நிச்சயம் தோற்கடிக்கும் - கடம்பூர் ராஜூ

மேலும் படுகாயமடைந்த கார்த்திக் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்தவர்களை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!