இப்படியும் காமக்கொடூரர்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்!

Published : Feb 18, 2024, 09:15 AM ISTUpdated : Feb 18, 2024, 09:22 AM IST
இப்படியும் காமக்கொடூரர்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்!

சுருக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் சந்தகாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் 34 வயதான கர்ப்பிணி பெண் மூன்று பேராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் சந்தகாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனது கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் சமரச பேச கர்ப்பிணிப் பெண் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் 3 ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் நான்கு பேர் இருந்துள்ளனர். 

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. விஷயம் தெரிந்த கணவர்.. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்!

அந்த மூன்று ஆண்கள் சேர்ந்து கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். 

இதையும் படிங்க: தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!

இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது கர்ப்பிணி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். இதனையடுத்து 80 சதவீத தீக்காயங்களுடன் கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி