மகளைக் காதலித்த நண்பனை மது போதையில் கழுத்தை நெறித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடைந்தயாக இருந்த மற்றொருவரும் கைதாகி இருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் ஆரள்ளி தாலுகா கும்பார தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் குமார் (25). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற சீனிவாஸ் (46) மற்றும் பொம்மையா ஆகிய 3 பேரும் நண்பர்கள். நாகேஷ் குமாரும் நாகராஜூம் மாமன் மச்சான் உறவு முறை கொண்டவர்கள்.
undefined
நாகராஜின் மகளை நாகேஷ் குமார் தான் தினமும் பைக்கில் கல்லூரிக்கு அழைத்து சொல்வதும் திரும்ப அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. நாகேஷ் தங்கள் காதல் குறித்து நாகராஜிடம் கூறி, திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரைக் கைப்பிடித்து ஆடம்பரமாக வாழும் நடிகை! சொத்து மதிப்பைக் கேட்டா தலைசுத்தும்!
நாகேஷ் மீது காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் இருப்பதால் நாகராஜ் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். தனது மகளை மறந்துவிடும்படி புத்திமதி கூறியிருக்கிறார். நாகேஷ் அதைக் கேட்கவில்லை. இதனால் ஆத்திம் அடைந்த நாகராஜ் நாகேஷை கொலை செய்ய முடிவு செய்துவிட்டார்.
கூட்டாளியாக பொம்மையா என்பவரைச் சேர்த்துக்கொண்டு பிப்ரவரி 13ஆம் தேதி இரவு நாகேஷ் உடன் மது அருந்தியுள்ளார். நாகேஷுக்கு எக்கச்செக்கமாக ஊற்றிக்கொடுத்து போதை ஏற்றி, அவர் மட்டையானதும் காருக்குள் ஏற்றுச் சென்றுள்ளனர். காரில் போகும்போதே நாகேஷின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் நாகராஜ். சடலத்துடன் தளியை அடுத்த நெல்லுமார் வனப்பகுதிக்குச் சென்று நாகேஷ் குமாரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
வனப்பகுதியில் கருகிக் கிடந்த ஆண் சடலத்தைக் கண்டு விசாரணை நடத்திய தளி போலீசார், சிசிடிவி காட்சிகளில் நாகராஜ், பொம்மையா, நாகேஷ் குமார் மூவரும் ஒரே காரில் சென்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதை வைத்து நாகராஜிடம் விசாரித்தபோது, அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆகிவிட்டார். தலைமறைவாக இருக்கும் நாகராஜின் கூட்டாளி பொம்மையாவைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்