சாமியாரிடம் குழந்தை வரம் கேட்ட பெண்.. சேட்டை செய்த சாமியார் மிர்ச்சி பாபா ! காவல்துறை கைது !

Published : Aug 09, 2022, 07:53 PM IST
சாமியாரிடம் குழந்தை வரம் கேட்ட பெண்.. சேட்டை செய்த சாமியார் மிர்ச்சி பாபா ! காவல்துறை கைது !

சுருக்கம்

போபாலில் ஒரு பெண்ணுக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் மிர்ச்சி பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மிர்ச்சி பாபா என்ற வைரக்யானந்த் கிரியை போபால் மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர். தனக்கு குழந்தை பிறக்க முடியாததால் தான் சாமியாரை சந்தித்தேன் என்றும்,  அவர் தனக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். வைரக்யானந்த் கிரி என்ற மிர்ச்சி பாபா, 2019 லோக்சபா தேர்தலில் திக்விஜய் சிங்குக்காக பிரச்சாரம் செய்தார்.

மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?

அப்போது தான் பிரபலமடைய தொடங்கினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் இதுபற்றி பேசும்போது, சாமியார் மிர்ச்சி பாபா இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். பாபா தனக்கு போதைப் பொருள் கொடுத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். அதை உட்கொண்ட அவர் மயங்கி விழுந்து, அதன் பிறகு பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் கூறினார். நேற்று மகிளா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

குற்றம் சாட்டப்பட்ட மிர்ச்சி பாபா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376, 506 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மிர்ச்சி பாபா குவாலியரில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு போபாலுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை வரம் வேண்டும் என்று வந்த பெண்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி