சர்ச்சில் ஒரே நேரத்தில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சேட்டை செய்த பாதிரியாரை தூக்கிய போலீஸ் !

Published : Aug 09, 2022, 04:20 PM IST
சர்ச்சில் ஒரே நேரத்தில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சேட்டை செய்த பாதிரியாரை தூக்கிய போலீஸ் !

சுருக்கம்

ராமேஸ்வரத்தில் உள்ள தேவாலயத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்,  ராமேஸ்வரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் இருக்கிறது. இந்த தேவாலயத்துக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் வருவது வழக்கம். இந்த சர்ச்சில்  ஜான் ராபர்ட் என்ற பாதிரியார் இருந்து வந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோணித்துறை, வலையர்வாடி, மரவெட்டிவலசை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளனர். அவர்களிடம் ஜான் ராபர்ட் என்ற இந்த பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் ஜான் ராபர்ட் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரியும் ஜான் ராபர்ட் என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?

இதனையடுத்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பாதிரியார் மீது மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசார் பாதிரியாரை கைது செய்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை