நம்பர் பிளேட் இல்லாத பைக்.. கஞ்சா டோர் டெலிவரி.. கையும் களவுமாக பிடிப்பட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர்.!

Published : Aug 09, 2022, 02:08 PM IST
நம்பர் பிளேட் இல்லாத பைக்.. கஞ்சா டோர் டெலிவரி.. கையும் களவுமாக பிடிப்பட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர்.!

சுருக்கம்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையில், புதிய பேருந்து நிலையில், ரயில்நிலையம் அருகே என பல பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதனால், போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

அப்போது, ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மூலம் வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக போலீசாரிடம் பிடிப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இவர் நரசிங்கபுரம் நகராட்சி 16வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பதும் தெரியவந்தது. இவர் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா பொட்டலங்களை ஆர்டர் எடுத்து பதிவெண் இல்லாத இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை டொர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்த 40 கஞ்சா பொட்டலங்களை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி