எய்ட்ஸ் பாதித்த இளைஞன் மீது வெறித்தனமான காதல்... ஊசியால் ரத்தத்தை எடுத்து உடம்பில் ஏற்றிக் கொண்ட காதலி.

Published : Aug 09, 2022, 06:48 PM ISTUpdated : Aug 09, 2022, 06:56 PM IST
எய்ட்ஸ் பாதித்த இளைஞன் மீது வெறித்தனமான காதல்... ஊசியால் ரத்தத்தை எடுத்து உடம்பில் ஏற்றிக் கொண்ட காதலி.

சுருக்கம்

தன் காதலனின் மீது உள்ள காதலை வெளிப்படுத்த எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் ரத்தத்தைப் தனது உடலுக்குள் செலுத்தி பெண் ஒருவர் காதல் உணர்வை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.    

தன் காதலனின் மீது உள்ள காதலை வெளிப்படுத்த எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் ரத்தத்தைப் தனது உடலுக்குள் செலுத்தி பெண் ஒருவர் காதல் உணர்வை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலுக்கு கண்ணில்லை, சாதி மதம் கடந்தது காதல், அதற்கு வயசு வித்தியாசம் தெரியாது என தன் காதல் குறித்து பலரும் பலவகைகளில் கருத்து கூறுவர். தங்கள் காதலை  தங்கள் பார்ட்னருக்கு புரியவைக்க பல வகையில் மெனக்கெடுவார். 

அடிக்கடி காதலருக்கு பரிசு வழங்குவது, அவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது  அல்லது அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வது என பல வகையில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தனது காதலன் மீதுள்ள காதலை நிரூபிக்க இளம்பெண் ஒருவர் செய்துள்ள காரியம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:  3 பெண்கள் கொலை.. உடல் பாகங்கள் வெவ்வெறு இடத்தில் வீச்சு.. 4வது கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட போது சிக்கிய தம்பதி.!

முழு விவரம் பின்வருமாறு அசாம் மாநிலம் சுவல் குச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே  மாநிலத்தில் சேதோலா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் காதலில் ஈடுபட்டு வந்தார். அவர்கள் இருவரும் பேஸ்புக் மூலமாக பழகி பின்னர் காதலர்களாக மாறியவர்கள் ஆவர்.

இதையும் படியுங்கள்: டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி? சொல்லித் தரவா! லாட்ஜிக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்! பல உல்லாச வீடியோக்கள்.!

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் காதலித்து வந்தனர். அந்தப் பெண்ணுக்கு 15 வயது ஆகும் நிலையில் அடிக்கடி அந்தப் பெண் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களில் சுற்றி வந்துள்ளார், இதனையடுத்து பலமுறை அவரது பெற்றோர்கள் அந்த பெண்ணை திரும்ப அழைத்துச் சென்று உள்ளனர்.

ஆனாலும் இருவருக்கும் இடையேயான காதல் மேலும் மேலும் வலுவடைந்தது. இந்நிலையில் அந்த இளைஞர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை காதலியுடன்  கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எந்த சூழ்நிலை வந்தாலும், தன்னைப் பிரிய மாட்டேன் என காதலனுக்கு வாக்குறுதி அளித்துள்ளதுடன், பிறகு காதலனைப் போல தானும் ஆக வேண்டும் என முடிவு செய்த அந்தப் பெண், தனது காதலனின் உடலிலிருந்து ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டார். பின்னர் இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிந்தது.

அந்த சிறுமியின் இந்த செயலை கேட்டு அவர்கள் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக அந்தப் பெண்ணின் வீட்டார் காதலன் மீது புகார் கொடுத்தனர். எங்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், காதலிக்கலாம் அதற்காக இப்படியா? காதலித்த இளைஞனை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வதை விட்டு தனக்கும் அந்த நோயை வரவழைத்து கொள்வது முட்டாள்தனமான முடிவு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.   
 

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?