மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பயங்கரம்; சிகிச்சைக்காக சென்ற பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை

By Velmurugan s  |  First Published Sep 1, 2024, 3:26 PM IST

மேற்கு வங்கம் மாநிலத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற பெண் நோயாளியை ஆய்வக பணியாளர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேற்கு வங்கம் மாநிலத்தின், ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரச்செய்தது. இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தற்போதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவில் சிடி ஸ்கேன் எடுப்பதற்காக பெண் நோயாளி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பெட்ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி செய்த செயல்! வீடியோவுடன் சிக்கினார்! வைரலாக்கிய கணவரால் கதறல்!

ஆய்வகத்தில் இருந்து வெளியில் வந்த சிறிது நேரம் கழித்து தனக்கு நடந்த கொடுமையை அப்பெண் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்க்கி அடைந்த உறவினர்கள் இது தொடர்பாக மருத்தவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஓப்பந்த ஊழியரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.50 கோடி மதிப்பிலான கஞ்சா, போதை சாக்லேட்டுகள் பறிமுதல்! மாணவர்கள் வழியே இலங்கைக்கு கடத்தல்?

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மருத்துவமனையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான போராட்டங்கள் முடிவடையாத நிலையில் தற்போது மேலும் ஒருவர் மருத்துவமனையிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!