70 வயது மூதாட்டி பலாத்காரம்... சடலத்தையும் விட்டு வைக்காத வெறியன்... 2 நாள் கழித்து கைது!

"மூதாட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கருதுகிறோம். ஷேக்  மூதாட்டியின் உடலுடன் அதே வீட்டில் இருந்தார்" என்று போலீசார் கூறியுள்ளனர்.


மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவுசா தெஹ்சிலில் உள்ள பேட்டாவில் என்ற இடத்தில் வசிப்பவர் 35 வயதான மன்சூர் ஷேக். திங்கட்கிழமை காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

Latest Videos

போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் இறந்த மூதாட்டியின் உடல் அழுக ஆரம்பித்துவிட்டதாகவும் போலீசால் கூறுகின்றனர்.

"மூதாட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கருதுகிறோம். ஷேக்  மூதாட்டியின் உடலுடன் அதே வீட்டில் இருந்தார்" என்று போலீசார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் பேட்டாவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போர்கானில் வசிப்பவர். கடந்த சில நாட்களாக பேட்டா கிராமத்தில் தங்கியிருந்தார். ஷேக் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார். ஷேக்கின் மனைவியும் தாயும் அவரை வீட்டில் தனியாக விட்டுச் சென்ற பிறகு இந்த அவலம் நடந்துள்ளதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேட்டா காவல் நிலையத்தில் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!