கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் ஒரு முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய 53 முக்கியப் பொருட்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது, இதில் பிரதான சந்தேக நபரான சஞ்சய் ராயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒன்பது "குற்றம் சாட்டக்கூடிய பொருட்கள்" அடங்கும்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் ஒரு முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய 53 முக்கியப் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் பிரதான சந்தேக நபரான சஞ்சய் ராயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒன்பது "குற்றம் சாட்டக்கூடிய பொருட்கள்" அடங்கும். TOI செய்தி அறிக்கையின்படி, இந்தப் பொருட்களில் குற்றம் நடந்தபோது ராய் அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள் மற்றும் செருப்புகள் அடங்கும்.
ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் நடந்த தாக்குதலின் போது ராய் குற்றம் நடந்த இடத்தில் இருந்ததை உறுதிப்படுத்தும் தொலைபேசி டவர் டேட்டா உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஆதார சேகரிப்பின் ஒரு பகுதியாக ராயின் பைக் மற்றும் ஹெல்மெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்த முக்கியமாக எதிர்பார்க்கப்படும் தடயவியல் அறிக்கைகள் வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இரவு 8:30 மணி முதல் இரவு 10:45 மணி வரை குற்றம் நடந்த இடத்தில் இருந்து மாநில தடய அறிவியல் ஆய்வகத்தால் சேகரிக்கப்பட்ட 40 காட்சிக் குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மருத்துவர்கள் உட்பட உள்ளூர் சாட்சிகள் முன்னிலையில் முழு நடைமுறையும் வீடியோவில் முழுமையாக ப பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட சஞ்சை ராயின் குளோன் செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தரவு, டிஜிட்டல் ஆதாரங்களின் மற்றொரு முக்கிய பகுதியாகும். கூடுதலாக, இரண்டு மருத்துவமனை கேமராக்களில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் - எண் 8 மற்றும் எண் 16 - வளாகத்தில் சஞ்சை ராயின் இருப்பைப் உறுதி செய்துள்ளன. இது அவர் மீதான வழக்கை மேலும் வலுப்படுத்துகிறது.
தடயவில் துறையின் நிபுணர் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் கைரேகை மற்றும் கால் தடம் ஆகியவற்றையும் சேகரித்தன. மேலும், சஞ்சை ராயின் இடது கன்னம், இடது கை மற்றும் இடது தொடையின் பின்புறத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்த மருத்துவ அறிக்கை, இந்த கொடூர குற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான மேலும் சான்றாக அமையும்.
Death Penalty | இந்தியாவில் எந்தெந்த குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது தெரியுமா?
குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த இரத்த மாதிரிகளுடன் பொருத்த சஞ்சை ராயின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன, அவை தடயவியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தொடர்புடைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாப்பதற்காக கொல்கத்தா காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது, இது நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் டிஜிட்டல் ஆதாரங்களில் ஒன்றாக சேர்க்கப்படும்.
விசாரணை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக, இதுவரை சேகரிக்கப்பட்ட உடல், டிஜிட்டல் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் விரிவான அறிக்கையுடன், சிபிஐ குற்றப்பத்திரிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜ்மீர் பலாத்கார வழக்கு: 250 பெண்களை சூறையாடிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு