Asianet News TamilAsianet News Tamil

அஜ்மீர் பலாத்கார வழக்கு: 250 பெண்களை சூறையாடிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

பாதிக்கப்பட்ட சுமார் 250 பெண்களில் பெரும்பாலானவர்கள் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகள். இவர்கள் ஒரு பண்ணை வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்தது. 

Ajmer Blackmail Case: 6 Men Found Guilty sgb
Author
First Published Aug 20, 2024, 5:27 PM IST | Last Updated Aug 20, 2024, 7:40 PM IST

அஜ்மீரில் உள்ள சிறப்பு போக்சோ சட்ட நீதிமன்றம், 32 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நஃபீஸ் சிஷ்டி, நசீம் என்கிற டார்சன் உட்பட ஆறு பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளை ஆபாசப் படம் எடுத்து மிரட்டினர். புகைப்படங்களை கசிய விடுவதாக மிரட்டி, அவர்களை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர். 1992ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

நாட்டையே உலுக்கி இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 250 பெண்களில் பெரும்பாலானவர்கள் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகள். இவர்கள் ஒரு பண்ணை வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் நான்கு பேர் ஏற்கனவே தண்டனையை அனுபவித்துவிட்டனர்.

மாதம் ரூ.10 லட்சம்... புது வீடு... யூடியூப் சேனல் தொடங்கி சொகுசாக செட்டில் ஆன லாரி டிரைவர்!

இந்த வழக்கில் சூபி மொய்னுதீன் ஹாசன் கிஸ்டி தர்கா நிர்வாகிகளான காதிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியான நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் புகார்கள் வந்தன.

முதல் குற்றப்பத்திரிகை நவம்பர் 30, 1992 அன்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட பலர் கைதானாலும் விரைவில் ஜாமீனில் வந்துவிட்டனர். சிலர் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்ற ஆண்டு இந்த வழக்கின் அடிப்படையில் அஜ்மீர் 1992 என்ற திரைப்படமும் வெளியானது. சர்ச்சையைக் கிளப்பிய இந்தப் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்ற ஜூலை மாதம் முடிந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அஜ்மீர் பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நஃபீஸ் கிஸ்டி, நசீம் என்ற தர்ஷான், சலீம் கிஸ்டி, இக்பால் பாதி, சோகில் கனில், சையத் ஜாமீர் ஹூசைன் ஆகிய ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் அறியப்படாத அதிசயங்கள்! புரியாத புதிர்கள்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios