தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள கரையாளர் தெருவைச் சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் தாய் உயிரிழந்த நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இன்று அதிகாலை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து செங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்கோட்டை காவல் துறையினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, உயிரிழந்த பெண்ணின் உடலில் ரத்த காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மேல் பிரேத பரிசோதனை செய்வதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஆய்வு மேற்கொண்டார்.
ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.