கணவரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
கணவரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திர நகர் இல்லத்தில் நந்தினி என்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவர் ரத்னதீப் நந்தினியின் பெற்றோருக்கு போன் செய்து, நந்தினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன் கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், நந்தினியை அவரது கணவர் மற்றும் மாமியார் இருவரும் கொன்று தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுகிறார்கள் என நந்தினியின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
லேப் டெக்னீஷியனாக இருக்கும் நந்தினியின் கணவர் ரத்னதீப் மற்றும் அவரது தாய் இருவரும் நந்தினியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக நந்தினியின் பெற்றோர் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாகவே அவர்கள் தங்கள் மகளை, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துவந்தனர் எனத் தெரிவிக்கின்றனர்.
திருமணத்தின்போது வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாக நந்தினியின் பெற்றோர் கூறுகின்றனர். நந்தினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 304-பி (வரதட்சணை மரணம்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகி 26 வருடம் ஆச்சு.. குழந்தை இல்லை - கணவனுக்கு எதிராக மனைவி போட்ட ஸ்கெட்ச்