போதை தலைக்கேறிய நிலையில் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன் கைது

By Velmurugan s  |  First Published Apr 9, 2023, 7:21 AM IST

கோவையில் மது போதையில் தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய மகனை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரா (வயது 45). இந்த தம்பதியின் மகன் குருநாதன் (வயது 30).

குருநாதனுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும், மகன் குருநாதன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை கர்ணனும், மகன் குருநாதனும் இருவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர், வீடு திரும்பியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

வாகன ஓட்டிகளிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

அப்போது, கர்ணன் குருநாதனிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குருநாதன் அரிவாளால் கர்ணனின் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலமாக வெட்டியுள்ளார். 

ஓசூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி - பெற்றோர் கதறல்

இச்சம்பவம் குறித்து அறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விரைந்து சென்று படுகாயமடைந்த கர்ணனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் காவல் துறையினர் தந்தையை வெட்டிய மகன்  குருநாதனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!