கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி தம்பதி ஸ்ரீமுருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.
கோவையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி 96 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி தம்பதி ஸ்ரீமுருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதில், 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் சூலூர் கே.கே சாமி நகரை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் ரூபாய் 11.80 லட்சம் லட்சத்தை சீட்டு பணமாக செலுத்தியதாகவும், ஆனால் தான் கட்டிய பணம் அவருக்கு திரும்பி கிடைக்கவில்லை எனவும் கோவை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க;- ஓடும் தனியார் பேருந்தில் பெண் வெட்டிப் படுகொலை.. அலறி கூச்சலிட்ட பயணிகள்.. அதிர வைக்கும் காரணம்..!
அவரை தொடர்ந்து மேலும் சிலர் இதேபோன்று புகார்கள் அளித்தனர். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியதில் 43 பேர் 86 சீட்டு பிரிவுகளில் ரூ.96 லட்சம் முதலீடு செய்து இருந்ததும் கட்டிய பணத்தை அவர்கள் திரும்பி தராமல் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பன் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை.. விசாரணையில் பகீர்..!
இது தொடர்பாக ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் அவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.