தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து தீ வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பலோத்ராவில் வீட்டில் தனியாக இருந்த தலித் பெண்ணை பாலியன் வன்புணர்வு செய்துவிட்டு உடலில் தீ வைத்துச் சென்றதில் அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார்.
30 வயதான அந்தப் பெண்ணுக்குத் திருமணமானமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். வியாழக்கிழமை அந்தப் பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கூர் கான் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் அந்தப் பெண் மீது ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றி தீவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தினமும் ஒரே டார்ச்சர்! கணவன், மாமியார் தொல்லையால் தூக்கில் தொங்கிய இளம்பெண்
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சக்கூர் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டுகிறது. மாநிலத்தில் 'காட்டு ராஜ்ஜியம்' நிலவுவதாகச் சாடுகிறது. இந்நிலையில், பலோத்ராவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகக் கூறுகிறார்.
சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி செய்வதாக உறுதியளித்ததாகவும் ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டதாகவும் மதன் பிரஜாபத் தெரிவிக்கிறார். அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜோத்பூர் மருத்துவமனையில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பார்மர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அஷ்வின் பன்வார், அவர்கள் சொந்த ஊரான பலோத்ராவுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி ஜீப் சவாரி