
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்கிற கட்டுப்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. மேலும் 10 மணி வரை செயல்படுகின்ற பார்களிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை உள்ளது. ஆனால் அவை எல்லாம் நடைமுறையில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை ஜெனரல் பீட்டர்ஸன் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நள்ளிரவில் மதுவிருந்துகளுடன் ஆபாசம் நடனம், குத்தாட்டம் ஆடுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்
அதன்படி போலீசார் நேற்று முன்தினம் புகார் வந்த தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், தங்களது ஆண் நண்பர்களுடன் மது மயக்கத்தில் ஆபாசமாக நடனமாடிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் உடனே விருந்தில் ஒலிக்கப்பட்ட ஆடியோவை நிறுத்தினர். மது போதையில் தங்கள் சுயநினைவின்றி நடனமாடிய 30 பெண்களை போலீசார் மீட்டனர்.
அப்போது போதையில் இருந்த வாலிபர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். பிறகு தடை செய்யப்பட்ட இரவு நடன விருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் காவல் நிலையத்திற்கு வந்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்தனர். பின்னர் மது போதையில் இருந்த 30 இளம் பெண்களையும் அவர்களிடம் வீட்டின் முகவரி, செல்போன் எண்களை எழுதி வாங்கி கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !
பின்னர் சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் தடைசெய்யப்பட்ட இரவு நடன விருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி நிர்வாகத்தின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 30 இளம் பெண்கள் விடுதியில் போதையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?