
தன்னிடம் படித்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்த கணக்கு வாத்தியாரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது.
ஆசிரியர் என்பவர் தாய் தந்தைக்கு அடுத்தபடியாகவும், கடவுளைவிட ஒரு படி மேலான அந்தஸ்திலும் வைத்து பார்க்கப்படும் ஒரு ஸ்தானமாகும். ஆனால் சில இடங்களில் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்குமே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது.
மாணவர்களுக்கு பாடம் கற்பித்து அறியாமை என்னும் இருளை அகற்ற வேண்டி ஆசிரியர்கள், தங்களின் நிலையை மறந்து தரம் தாழ்ந்து மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பல நேரங்களில் முகம் சுளிக்க வைத்துவிடுகிறது.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பியூன்… கைது செய்து விசாரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
இதுபோன்ற ஒரு சம்பவம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது, அப்பள்ளியில் கணக்கு வாத்தியாராக பணியாற்றி வருகிறார் தினேஷ், இவர் அந்த தனியார் பள்ளி உரிமையாளரின் உறவினர் ஆவார்,
இதையும் படியுங்கள்: நான் அவனில்லை பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்..! பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் புகார்
இவர்க்கு அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது, இதனால அம்மாணவியை அடைய துடித்தரார். அந்த மாணவியை காதலிப்பதாக கூறினார், அதற்கு மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை, இதனால் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் அம்மாணவி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து பெற்றோரிடம் புகார் கூறினர். இதையடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், பலமுறை கண்டித்தனர், பின்னர் மாணவியை பள்ளிக்கூடத்தை விட்டை இடை நிறுத்தம் செய்தனர். ஆனாலும் அந்த ஆசிரியர் தினேஷ் மாணவிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியர் தினேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.