திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அந்தப்பெண்ணை ரயில்வே ஊழியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அந்தப்பெண்ணை ரயில்வே ஊழியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதுடெல்லியில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுப்புக் காவல் துறையும், அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை . காதலிப்பதாக கூறி கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவிப்பது. போன்ற எண்ணற்ற கொடுமைகள், மோசடிகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் திருமணமான பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
முழு விவரம் பின்வருமாறுந:- புதுதில்லியில் 30 வயது பெண் ஒருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் அந்தப் பெண் வேலைக்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்து செல்வது வழக்கம், அப்போது ரயில்வே துறையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றும் (35) சதீஷ்குமார் உடன் அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டது, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது, இந்நிலையில் அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என சதீஷ்குமார் முடிவு செய்தார். அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து பேசி வந்தார், அந்தப் பெண்ணுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: உடலை எரிக்க வேண்டாம் புதைச்சிக்கலாம்.. திடீரென முடிவை மாற்றிய கள்ளக் குறிச்சி மாணவி குடும்பத்தினர். காரணம்.??
நல்லவரை போல பேசிய சதீஷ்குமாரை அந்தப் பெண் நம்ப ஆரம்பித்தார். இந்நிலையில் ஒருநாள் சதீஷ்குமார் தனது மகனின் பிறந்த நாள் மற்றும் புதுவீடு வாங்கியுள்ளதையோட்டி தனது வீட்டில் விருந்து இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் கூறினார், நிலையில் அதை ஏற்று அந்தப் பெண் வெள்ளிக் கிழமை இரவு 10:30 மணிக்கு டெல்லி கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையம் வந்தனைந்தார், அங்கு தயாராக இருந்த சதீஷ் குமார் அந்தப் பெண்ணை புது தில்லி ரயில் நிலையம் 8 -9 பிளாட்பாரத்திற்கு அழைத்து வந்ததுடன், மின் பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறையில் தங்குமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்ணும் சதீஷ் குமாரின் மீதுள்ள நம்பிக்கையில் ஒப்புக் கொண்டார்.
அந்த பெண் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் அந்த அறைக்கு வந்த சதீஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வினோத் குமார் (38), மங்கல் சந்த் மீனா (32), ஜெகதீஷ் சந்த் (37) ஆகியோர் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு அந்தப் பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை, தங்களில் காமவெறி தீர கற்பழித்த அவர்கள் கதவை நிறந்து வெளியில் அனுப்பினர். இந்நிலையில் அதிகாலை 2 .30 மணி அளவில் அந்தப் பெண் போலீசாருக்கு போன் செய்து 4 பேர் கொண்ட கும்பல் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். தான் தற்போது பழைய டெல்லி ரயில் நிலையத்தில் உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்: வெளிநாடு போன கணவன்.. சங்கரின் தொடர்பில் மனைவி மிருதுளா.. திரும்பி வந்த புருஷன் குக்கரால் அடித்து கொலை
பின்னர் அந்த பெண்ணை போலீசார் தேடினர், 8-9 வது பிளாட்பாரத்தில் தான் இருப்பதாக அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்துச் சென்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர், அப்போது தான் பரிதாபாத்தைச் சேர்ந்தவர் என்றும், திருமணமாகி கணவரிடம் இருந்து பிரிந்து இருப்பதாகவும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ரயில்வேயிர் எலக்ட்ரீசியனாக உள்ள சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் நட்பாக பழகி வந்ததாகவும்,
பின்னர் தனது வீட்டில் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் புதுவீடு வாங்கியுள்ளதால் விருந்து நிகழ்ச்சி இருக்கிறது என்றும் அதில் தயவு செய்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதின் பேரில் அவரை நம்பி தான் ரயில் நிலையம் வந்ததாகவும், ரயில்வே எல்க்ட்ரீஷியன்கள் ஓய்வெடுக்கும் அறையில் தங்கியதாகவும் அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை சீரழித்து விட்டதாகவும் அந்த பெண் கதறினார். இந்நிலையில் சதீஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.