புதுச்சேரியில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். 2 நண்பர்களுக்கு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். 2 நண்பர்களுக்கு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). ரவுடியான இவர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. தனது வீட்டில் நண்பர்கள் சக்தி (20), பாலாஜி உள்ளிட்டோருடன் மது குடித்து விட்டு, பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10 மணியளவில் மர்ம கும்பல் அங்கு வந்தது. இவர்களையும் பார்த்ததும் உயிர் பயத்தில் தப்பிக்க முயற்சித்தனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசியுள்ளது.
பின்னர், பன்னீர்செல்வம் மற்றும் உடனிருந்த 2 நண்பர்களையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், இரண்டு பேர் படுகாயமடைந்து வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக பன்னீர்செல்வம் ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்தி, பாலாஜி ஆகியோருக்கு கதிர்காமம் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.