மகனை கடத்தி தாயிடம் நிர்வாண வீடியோ பேசி, பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் ராஜபாளையம் சாலையில் வசித்து வருபவர் லதா. இவருக்கு வயது 49. இவருக்கு சந்தான புஷ்பம் என்ற பெண்ணும், முரளி என்ற மகனும் உள்ளனர். இதில் முரளி மதுவுக்கு அடிமையானதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விஜயலட்சுமி போதை தடுப்பு மைய மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் 16 ஆம் தேதி முரளி போதை தடுப்பு சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறி அன்று இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புது தெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் செல்போனில் லதாவிற்கு தொடர்பு கொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
இதையடுத்து அந்த செல்போனில் தொடர்ந்து பேசிய ரஞ்சித் முரளியை தன்னுடைய கஸ்டடியில் வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேச வேண்டும் என்று லதாவை வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் வேறு வழி இல்லாமல் லதாவும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளார்.
லதா நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதை முரளி பதிவு செய்து அவரை உடனடியாக புறப்பட்டு திருச்சிக்கு வரச் சொல்லி உள்ளார். பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அசோக் பவன் ஹோட்டலுக்கு லதாவை முரளி அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் அவரது நிர்வாண படங்களை லதாவின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதுத்தொடர்பாக கண்ட்டோன்மென்ட் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !