
காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவி கார் வைத்து ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்த கொலை நடந்துள்ளது, கணவனுடைய துர்திஷ்டவசமாக அவரது சகோதரியும் உயிரிழந்துள்ளார்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கார் ஏற்று கொலை செய்துள்ளார். முழு விவரம் பின்வருமாறு:- ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சேர்ந்தவர் ரமேஷ் பட்டேல், இவரது மனைவி குட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிய புதிய வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருவது குட்டியின் வாடிக்கையாகும்,
அதில் ஒரு இளைஞருக்கு குட்டி மீது ஈர்ப்பு ஏற்பட்டது, இந்நிலையில் அந்த நபருடன் குட்டி திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை நடவடிக்கைகள் கணவர் ரமேஷிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் எச்சரித்து வந்தார். ஆனால் கணவன் ரமேஷ் தன்னுடைய மகிழ்ச்சியில் தலையிடுவது குட்டிக்கு பெரும் தலைவலியாக இருந்தது, இந்நிலையில்தான் ரமேஷும் அவரது சகோதரி கவிதாவும் இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர், அப்போது பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள்: பெத்த பொண்ணையே, அட *த்தூ.. அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து 7 வயது மகளை கற்பழித்த சம்பவம்
இது எதார்த்தமாக நடந்த விபத்து போல சித்தரிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர், அப்போது அதில் சங்கர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர், சங்கரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அவர் கூறிய தகவல் போலீசாரையை அதிர்சியடைய வைத்தது, தன் உயிரிழந்த ரமேஷ் மனைவி குட்டியின் கள்ளகாதலன் என்றும், குட்டிதான் தனது கணவரை கொலை செய்யுமாறு தன்னிடம் கூறினார் என்றும் அவர் போலீசாரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் குட்டியை தூக்கி வந்து விசாரித்தனர். அப்போது குட்டியும் தனக்கும் சங்கருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ள உறவு இருந்து வருகிறது,
இதையும் படியுங்கள்: வெளிநாடு போன கணவன்.. சங்கரின் தொடர்பில் மனைவி மிருதுளா.. திரும்பி வந்த புருஷன் குக்கரால் அடித்து கொலை
ஆனால் கணவர் ரமேஷ் எங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்தார், இதனால் அவரை கொள்ளுமாறு நான்தான் சங்கரிடம் கூறினேன், இதற்காக பழைய எஸ்யூவி கார் காதலன் சங்கர் வாங்கினார், அவருக்கு உதவியாக அவரது நண்பர் மாலி உடன் இருந்தார். நாங்கள் மூவரும் சேர்ந்து என் கணவரை தீர்த்து கட்டினோம் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் மனைவி குட்டி என கணவர் எங்கிருக்கிறார், எப்போது வீட்டில் இருந்து வெளியில் சென்றார், போன்ற விவரங்களை தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு வழங்கி வந்ததையும் கூறினார். இந்நிலையில் அவர்கள் கணவன் ரமேஷை கார் ஏற்றி கொலை செய்தனர்.
ரமேஷை கொள்ளவே திட்டமிடப்பட்டது ஆனால் துரதிஷ்டவசமாக அவரது தங்கை கவிதாவும் அதில் உயிரிழந்தார் என குட்டி தெரிவித்தார். இந்நிலையில் கள்ளக்காதலனுக்காக மனைவி கணவனையும் அவரது சகோதரியும் கார் வைத்து மோதி கொலை செய்துள்ள நிலையில், இரட்டை கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரட்டை கொலை விவகாரத்தை கண்டித்து ரமேஷ் மற்றும் கவிதாவின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை தண்டிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் ஆயிரக் கணக்கில் திரண்டு போராடி வந்தனர், இதையடுத்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாஜக எம்பிக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.