வரதட்சனை கேட்டு அடி உதை.. 4 மாத கர்ப்பிணி பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார்..

Published : Jul 22, 2022, 08:14 PM ISTUpdated : Jul 22, 2022, 08:20 PM IST
வரதட்சனை கேட்டு அடி உதை.. 4 மாத கர்ப்பிணி பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார்..

சுருக்கம்

வரதட்சனை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார் 4 மாத கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் கொடூரம் நடந்துள்ளது. 

வரதட்சனை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார் 4 மாத கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் கொடூரம் நடந்துள்ளது. இதில் மாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன, இவற்றை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலித்து கற்பழித்த ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது,

காதலித்து திருமணம் செய்து விட்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, திருமணத்திற்குப் பின்னர் பாலியல் சித்திரவதை செய்து, அடித்து கொடுமைப்படுத்துவது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் வரதட்சணை கொடுமையால் நான்கு மாத கர்ப்பிணி மருமகளை மாமியார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், நிஜாம் சாகர் மண்டலம், அச்சம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொட்டு சங்கர், இவரின் மகள் கீர்த்தனாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பண்டாரி என்ற நபருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில மாதங்கள் வரை வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்தத,  ஆனால் மெல்ல மெல்ல கணவன் தனது கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்தார், கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்தது வந்தது, ஊர் பெரியவர்கள் பலமுறை பஞ்சாயத்து செய்த தம்பதியினரை சேர்ந்த வாழ அறிவுறுத்தினர்.

இதையும் படியுங்கள்: வெளிநாடு போன கணவன்.. சங்கரின் தொடர்பில் மனைவி மிருதுளா.. திரும்பி வந்த புருஷன் குக்கரால் அடித்து கொலை

ஆனால் திருமணம் ஆனது முதலே பண்டாரி கீர்த்தனாவை விதவிதமாக கொடுமை செய்து வந்தார், இந்நிலையில் தனது கணவருடன் கீர்த்தனா ஹைதராபாத்திற்கு வேலைத் தேடி தனிக் குடித்தனம் சென்றார். ஆனால்  ஒரு சில வாரங்களிலேயே அவரது மாமியார் விவசாய வேலை இருப்பதால் கீர்த்தனாவை ஊருக்கு வரும்படி அழைத்தார், ஆனால் கீர்த்தனாவுக்கு அதில் விருப்பம் இல்லை, இதனை அடுத்து கணவன் பண்டாரி மனைவி கீர்த்தனாவைஅழைத்துக்கொண்டு அச்சம்பேட்டைக்கு வந்தார்.  பின்னர் கீர்த்தனா வேலைக்காக விவசாய நிலத்திற்கு வந்தார்.

இதையும் படியுங்கள்:  ஒருத்தரா ரெண்டுபேரா 15 பேர், ஒரே நேரத்துல அவளை நாசம் பண்ணிட்டாங்க... ஊருக்கு ஒதுக்குபுறத்தில் பயங்கரம்

அப்போது அங்கிருந்த மாமியார் கீர்த்தனாவை தகாத வார்த்தைகளால் பேசி அவரை அடித்து உதைத்ததுடன் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ஏற்கனவே வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதில் தீ கீர்த்தனா உடல் முழுவதும் பரவியது, வெப்பம் தாங்கமுடியாமல் அலறினார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

அவரின் தந்தை பொட்டு சங்கர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த மாமியார் குறத்தி அம்பாவ்வை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக கீர்தனாவின் கர்ப்பம் கலைந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கீர்த்தனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  மருத்தவர்கள் கூறியுள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்