கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆசிட் வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இப்பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தின் முன்னுள்ள முக்கிய சாலையில் வழக்கறிஞர்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
undefined
ஆசிட் வீச்சு சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் கைது
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நீதிமன்றம் அருகே இரண்டு இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது