ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது

Published : Mar 23, 2023, 08:35 AM IST
ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது

சுருக்கம்

ஓசூரில் தனியார் உணவக மேல் தளத்தில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் விசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்ட நிலையில், விபசாரம் நடத்திய உணவக உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தனியார் உணவகத்தில் மேல் தளத்தில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது தலைமையில் ஒசூர் அட்கோ காவல் துறையினர் குறிப்பிட்ட தனியார் உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது அந்த உணவகத்தில் மூன்று பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளரான ஓசூர் கைராளி நகர் பகுதியை சேர்ந்த பிஜு (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்ட காவல் துறையினர் அவர்களை மறுவாழ்வு பெற அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பிஜுவை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ராங் கால் மூலம் இளைஞனை மயக்கி கத்தி முனையில் பணம் பறிப்பு; திண்டுக்கல்லில் துணீகரம்

ஓசூர் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபசாரம் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றசம் சாட்டப்படுகிறது. தற்போது வரை விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்களை மீட்டுள்ள காவல் துறையினர் அவர்களை மறுவாழ்வு பெற பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஓசூர் பகுதிகளில் விபசாரங்கள் நடைபெறுவது தெரியவந்தால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனி அறையில் அடைத்து சித்ரவதை; உணவுக்கு சாணத்தை கொடுத்து கொடூரம் - பெண் கதறல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!