தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியரை மாணவனின் பெற்றோர் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
இதையும் படிங்க;- என் பொண்டாட்டி, குழந்தையே போயிடுச்சு.. இந்த உலகத்துல எனக்கு என்ன வேலை! வேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!
அப்போது அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி மற்றும் தாத்தா முனியசாமி ஆகியோர் ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆசிரியர் ஒருவரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய பெற்றோர்- தலைமையாசிரியருக்கும் அடி உதை...
மகனை ஆசிரியர் தாக்கியதாக கூறி பெற்றோர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் - 3 பேர் கைது pic.twitter.com/82aangXkjn
பள்ளியில் இருந்த மேசை, நாற்காலி மற்றும் புத்தகங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்டபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடக்கப் பள்ளியில் ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு..!